நெடுந்தீவின் புதிய பிரதேச செயலாளர் கள ஆய்வில் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் முன்னெடுக்கப்படவுள்ள  அபிவிருத்தி  வேலைத்திட்டங்களை முன்னுரிமை அடிப்படையில் தெரிவுகளைமேற்கொள்ளும் விதமாக கள ஆய்வினை நெடுந்தீவு பிரதேச செயலாளர் என்.பிரபாகரன்  தலைமையிலான குழுவினர் மேற்கொண்டிருந்தார் இதேவேளை கிராம அலுவலர் பிரிவுகளில் இடம்பெற்ற குறித்த கள ஆய்வில்  பிரதேசசெயலர் மற்றும் திட்டமிடல் பிரிவின் அபிவிருத்தி உத்தியோகத்தர்களும்இணைந்துகொண்டு முன்னெடுக்கப்படவேண்டிய வேலைத்திட்டங்களைஅவதானித்தும் பொதுமக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்துகொண்டனர்

இதன்போது நெடுந்தீவு பிரதேச செயலரது நெடுந்தீவு பிரதேச வாழ் அனைத்துமக்களையும் கிராம அலுவர் பிரிவினூடாக சந்திப்பதன் முதற்கட்டமாக நெடுந்தீவுமத்தி கிழக்கு (J/05)  கிராம அலுவலர் பிரிவின் மக்களுடனான முதல்சந்திப்பானது சென்.அன்ரனீஸ் சனசமூக நிலையத்தில் பிரதேச செயலாளர் தலைமையில் கடந்த திங்கட்கிழமைவ(செப். 15) இடம்பெற்றது.

இதன்போது  மக்கள் தங்கள் பிரதேசத்தில் எதிர்கொள்ளும் பிரச்சினைகள்தொடர்பாக கேட்டறிந்து கொண்டதுடன் அதற்கான தீர்வுகள் பற்றியும்கலந்துரையாடப்பட்டது.

குறித்த கலந்துரையாடலில்  நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளர், உதவித்தவிசாளர், குறித்த பிரிவு கிராம அலுவலர், பொருளாதார அபிவிருத்திஉத்தியோகத்தர்கள் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article