நெடுந்தீவு பிரதேச சபையினரால் “வளமான நாடும் – அழகான வாழ்க்கையும்”எனும் தொனிப்பொருளைக் கொண்ட உள்ளூராட்சி வாரம் -2025 இன் நிகழ்வுகள் நெடுந்தீவு பிரதேசத்தில் கடந்த திங்கட்கிழமை(செப். 15) ஆரம்பமாகி மூன்றாவது நாளாக இன்றையதினமும் (செப். 17) இடம்பெற்றது.
1 வது நாள் நிகழ்வு (செப். 15)
நெடுந்தீவு பிரதேச உள்ளூர் வர்த்தகர்களுடனான கலந்துரையாடல் குறித்த தினத்தில் தேவா கலாச்சார மண்டபத்தில் இடம்பெற்றது.
இதன்போது வியாபார உரிமம் வழங்கல், வர்த்தகர்கள் எதிர்கொள்ளும்பிரச்சனைகள் மற்றும் நுகர்வோர் நலன் தொடர்பில் கலந்துரையாடப்பட்டதுடன்நெடுந்தீவு வர்த்தகர் சங்கமும் ஸ்தாபிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள், பிரதேச்சபை உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
2 வது நாள் நிகழ்வு (செப். 16)
நெடுந்தீவு மேற்கு ஆத்தங்கரையோடை இந்துமயானம் மக்கள் பங்களிப்புடன் சிரமதானம் மூலம் சுத்தம் செய்யப்பட்டதுடன் அப்பகுதியில் மரநடுகையும் இடம்பெற்றது.


இதன்போது பிரதேச சபை தவிசாளர், உபதவிசாளர், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள், பொதுமக்கள் மற்றும் நெடுந்தீவு பிரதேச பொலிசார் என பலர் கலந்து சிறப்பித்தனர்.
3 ஆவது நாள் நிகழ்வு (சகம். 17)
நெடுந்தீவிலுள்ள முன்பள்ளிப் பிள்ளைகளின் திறமைகளை வெளிக்கொண்டுவரும் நோக்கில் வர்ணம் தீட்டுதல் போட்டி இனரறையதின் 07 முன்பள்ளிகள் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

