நெடுந்தீவு மதுபானசாலையில் -வாள்வெட்டு இருவர் காயம் -ஒருவர் கைது!!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு தனியார் விருந்தக  மதுபானசாலையில் இன்று (செப். 16) இரவு 7 .00 மணியளவில் இரண்டு இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற  மோதலில் இளைஞர் இருவர் வாள்வெட்டில்  காயமடைந்துள்ளதுடன் மதுபானசாலை உபகரணங்களும் உடைக்கப்பட்டதாக தெரியவருகின்றது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது…

நெடுந்தீவு மதுபானசாலையில் இன்று இரவு 7.00 மணியளவில் திடீரென புகுந்த இளைஞர் குழு மதுபானசாலைக்குள் இருந்த இளைஞர் குழு மீது வாள்வெட்டு தாக்குதல் மேற்கொண்டதில் இரண்டு பேர் தலையிலும் முகத்திலும் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன்

குறித்த சம்பவம் தொடர்பில் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த  பொலிஸார் மீதும் வாள்வெட்டுக்குழுவினர் தாக்குதல் மேற்கொண்டுவிட்டு தப்பிச் செல்ல முற்பட்டபோது ஒருவர் கைது செய்யப்பட்டு நெடுந்தீவு பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதுடன்

தப்பிச்சென்றவர்களை தேடி கைது செய்யும் வகையில் பொலிசார் நடவடிக்கையினை மேற்கொண்டுள்ளனர்.

வீதியால் சென்ற பொதுமக்களை அச்சுறுத்தும் விதமாக வாள்வெட்டுக்குழுவினர் மோட்டார் சைக்கிளில் பயணித்ததாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

Share this Article