யாழ் பிராந்திய சுகாதாரப் பணிமனையின் ஏற்பாட்டில் “நெடுந்தீவு சுகாதார விழா” இன் தொடர்ச்சியாக நேற்றையதினம் வெள்ளிக்கிழமை (செப்.12) மாலை விளையாட்டு , மற்றும் கலை நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றது.
நெடுந்தீவு மகா வித்தியாலயத்திலும் எங்கள் வாழ்வு எங்கள் கையில் எனும் தொனிப்பொருளில் சுகாதார நிகழ்வு மாணவர்களது பங்குபற்றலுடன் சிறப்பாக இடம்பெற்றது.

தொடர்ந்து நெடுந்தீவு மகா வித்தியாலய மைதானத்தில் இடம்பெற்ற பாரம்பரிய விளையாட்டு நிகழ்வில் நெடுந்தீவில் உள்ள சுகாதார குழுக்களை சேர்ந்த அங்கத்தவர்கள் மற்றும் ஆர்வலர்கள் கலந்துகொண்டு சிறப்பாக செயற்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

இரவு நிகழ்வாக நெடுந்தீவு பிரதேச சபையின் தேவா கலாச்சார மண்டபத்தில் கலைநிகழ்வுகள் மற்றும் பிரதேச மட்டத்தித்தில் நடாத்தப்பட்ட போட்டி நிகழ்வுகளில் வெற்றிபெற்றோருக்கான பரிசில் வழங்கலும் இடம்பெற்றமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
