நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் பாடசாலை மாணவன் புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனை!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

2025ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகள்நள்ளிரவு (செப்.03) வெளியிடப்பட்டுள்ள நிலையில் நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலைகளில் இருந்து தோற்றியதில் 03 மாணவர்கள் வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று தீவுக்கும் பாடசாலைக்கும் பெருமை சேர்த்துள்ளனர்.

நெடுந்தீவு சீக்கிரியாம்பள்ளம் அ.த. க. வித்தியாலயத்தின் மாணவன் யோகச்சந்திரன் அக்‌ஷிகன் 170 புள்ளிகளைப்பெற்று நெடுந்தீவு கோட்டத்தில் சாதனைபடைத்துள்ளார்.

நெடுந்தீவு ஸ்ரீஸ்கந்தா வித்தியாலயத்தின் இரண்டு மாணவர்கள்வெட்டுப்புள்ளிக்கு மேல் பெற்று சித்தியடைந்துள்ளனர்.

நவரத்தினசிங்கம்.வஸ்மிகன்– 147

கேதீஸ்வரன்.சரண்ஷிகா -133

தாங்கள் கல்விகற்ற பாடசாலைக்கும் தீவுக்கும் பெருமைசேர்த்த  மாணவர்களுக்கு பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article