நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவை நடாத்தும் Bishop Cup 2025 மென்பந்து துடுப்பாட்டத் தொடர் எதிர்வரும் செப். 07 ஞாயிறுக்கிழமை நெடுந்தீவில் இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் செப்டெம்பர் 07 ஆம் திகதி ஞாயிறு காலை 09:30 மணிக்கு கிரிக்கெற் தொடரும் மாலை03:00 மணிக்கு கிளித்தட்டு தொடர்களும் ஆரம்பமாகின்றன.
தொடர்ந்து செப். 8, 9,10,11,12 ஆகிய திகதிகளை ஆயர் வாரமஆக அறிமுகப்படுத்தியுள்ள நெடுந்தீவு பங்கு திருஅவை குறித்த தினங்களில் மாலை02:00 மணிமுதல் கிளித்தட்டு கரப்பந்தாட்டம் மற்றும் உதைபந்தாட்டம் ஆகியனஇடம்பெற்று செப். 14 இறுதி நாள் போட்டிகள் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
தமிழுக்கும் திருமறைக்கும் அளப்பரிய பங்காற்றிய நெடுந்தீவு மண்ணின்மைந்தனும் மன்னார் மறைமாவட்டத்தின் முன்னாள் ஆயருமானஅதிவந்தனைக்குரிய இராஜப்பு ஜோசப் ஆண்டகையின் ஞாபகார்த்தமாகவும்இளையோர் மற்றும் மாணவர்களின் திறமைகளுக்கு களமமைக்கும் முயற்சியாகநடாத்தப்படுவதே Bishop Cup என்பது குறிப்பிடத்தக்கது.