நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையத்தின் ஏற்பாட்டில் ஆக்கத்திறன் போட்டிகள் நேற்றையதினம் (ஓகஸ்ட் 24) இடம்பெற்றது.
நெடுந்தீவு கல்விக் கோட்டத்திற்கு உட்பட்ட பாடசாலையில் கல்வி பயிலும் தரம் 04,05,06 மாணவர்களுக்கான சித்திரம், கவிதை, கட்டுரை ஆகிய போட்டிகள் முறையே வகுப்பு ரீதியாக இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.
போட்டிகள் யாவும் நெடுந்தீவு சென் அன்ரனிஸ் சனசமூக நிலையத்தில் இடம்பெற்றதுடன் மாணவர்கள் ஆர்வத்துடன் கலந்துகொண்டதாக நிலைய நிர்வாகத்தினர் தெரிரிவித்துள்ளனர்.