நெடுந்தீவில் கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம் இன்று ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலகம், நெடுந்தீவு பிரதேச செயலகத்துடன் இணைந்து நடத்திய “இதய பூர்வமாக யாழ்ப்பாணத்திற்கு” என்ற விசேட நிகழ்வு இன்றையதினம் (ஓகஸ்ட் 17)  நெடுந்தீவு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டத்தின் ஆரம்ப நிகழ்வின் போது பாடசாலை மாணவர்களது துவிச்சக்கர வண்டிகளுக்கான ரயர் மற்றும் அப்பாயாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டது.

இதேவேளை நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலைக்கென மின் விசிறியும் பிரதேச வைத்திய அதிகாரியிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது கடற்றொழில் மற்றும் நீரியல் அவள் அமைச்சர் இராமலிங்கம்சந்திரசேகர் ,பாராளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன், ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளர், கிளீன் ஸ்ரீலங்கா பணிப்பாளர், தீவக வலய கல்விப் பணிப்பாளர், கிளீன் ஸ்ரீலங்கா கொள்கை தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட உதவி செயலாளர் சாரதாஞ்சலி மனோகரன், நெடுந்தீவு பிரதேச செயலாளர் நிவேதிகா கேதீசன் மற்றும் நெடுந்தீவு பிரதேச சபை உறுப்பினர்கள், மாணவர்கள் பெற்றோர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Share this Article