நெடுந்தீவுக்கான படகுச்சேவை நேரம் மாற்றம் – ஓகஸ்ட் 11 முதல்!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நெடுந்தீவுக்கான கடற் போக்குவரத்து இடர்பாடுகளை குறைக்கும் முகமாகஎதிர்வரும் திங்கட்கிழமை (ஓகஸ்ட் 11) முதல் அரச படகுசேவைக்கான புதிய நேர அட்டவணை நடைமுறைக்கு வருகின்றது.

நெடுந்தீவு – குறிகட்டுவான்  இடையேயான சேவையில் ஈடுபடும் வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறுப்பிலுள்ள படகுகள்  சேவை பரீட்சார்த்தமாக அதிகரிக்கப்படவுள்ளது  

நெடுந்தீவு – குறிக்கட்டுவான் பயண நேரங்கள்

  • நெடுந்தாரகை: புறப்படும் நேரம் – காலை 6.15, சேரும் நேரம் – காலை 7.15

  • குமுதினி: புறப்படும் நேரம் – காலை 6.45, சேரும் நேரம் – காலை 7.45

  • குமுதினி: புறப்படும் நேரம் – பிற்பகல் 2.30, சேரும் நேரம் – பிற்பகல் 3.30

  • வடதாரகை: புறப்படும் நேரம் – பிற்பகல் 3.30, சேரும் நேரம் – பிற்பகல் 4.30

குறிக்கட்டுவான் – நெடுந்தீவு பயண நேரங்கள்

  • நெடுந்தாரகை: புறப்படும் நேரம் – காலை 7.30, சேரும் நேரம் – காலை 8.30

  • குமுதினி: புறப்படும் நேரம் – காலை 8.30, சேரும் நேரம் – காலை 9.30

  • குமுதினி: புறப்படும் நேரம் – பிற்பகல் 4.00, சேரும் நேரம் – பிற்பகல் 5.00

  • வடதருகை: புறப்படும் நேரம் – பிற்பகல் 4.45, சேரும் நேரம் – பிற்பகல் 5.45

நெடுந்தீவுக்கான அதிகரித்த பயணிகள் மற்றும் சேவையில் ஈடுபட போதுமானபடகுகள் இன்மை காரணமாக நெடுந்தீவுக்கு பயணிப்போர் நாளாந்தம் பெரும்சிரமங்களை எதிர்கொள்ள நேரிடுகின்றது.

இதனைக் கருத்திற்கொண்டு இன்று (ஓகஸ்ட் 09) குறிகட்டுவான் இறங்குதுறையில் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க  தலைமையில் கௌரவ கடற்தொழில் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், மாவட்ட செயலாளர், மேலதிக மாவட்ட செயலாளர், நெடுந்தீவு பிரதேச செயலாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் மாகாண பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகள் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் இம்முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய தினமும் காலை 6.15 மணிக்கு முதலாவது படகும் காலை 6.45 க்கு இரண்டாவது படகும் நெடுந்தீவிலிருந்து புறப்பட்டு மீளவும் முறையே காலை 7.30 மணிக்கும் காலை 8.30 மணிக்கும் குறிகட்டுவானில் இருந்து நெடுந்தீவுநோக்கிப் பயணிக்கும்.

இதேவேளை மாலை 2.30 மணிக்கும் மாலை 3.30 மணிக்கும்நெடுந்தீவிலிருந்து படகுகள் புறப்பட்டு மீளவும் முறையே மாலை 4.00 மணிக்கும் மாலை 4.45 மணிக்கும் குறிகாட்டுவானில் இருந்து புறப்படும்.

  

Share this Article