நெடுந்தீவைச் சேர்ந்த 38 வயதான ஒருவர் சிகிச்சை பலனின்றி மரணம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஆபிரிக்காவில்  இருந்து நெடுந்தீவை வந்தடைந்தடைந்த ஞானராசா அமலஜெயான் (ஜான் – வயது38) என்பவருக்கு மலேரியா உறுதிப்படுத்தப்பட்டு யாழ்போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சற்றுமுன் (ஓகஸ்ட் 09) சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இறப்பு தொடர்பில் தெரிவிக்கையில் …

கடுமையான நடுக்கம் போன்ற அறிகுறிகளுடன் நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு உடனடியாக குறித்த நபர் மாற்றப்பட்டிருந்தார்.

யாழ் போதனா வைத்தியசாலையில் உடனடியாகவே தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு உரிய சிகிச்சைகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், பரிசோதனையில் அவருக்கு மலேரியா ஏற்பட்டிருப்பது உறுதிப்படுத்தப்பட்டது.

சிகிச்சைகளின் பின்னர் அவரது குருதியில் மலேரியா கிருமிகள் முற்றாக அழிக்கப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டாலும் அவருக்குக் காணப்பட்ட பல்வேறுநோய் நிலைகளால், அவர் சுய நினைவற்ற நிலையில் தீவிர சிகிச்சைப் பிரிவில்அனுமதிக்கப்பட்டு இருந்த நிலையில் சற்றுமுன் யாழ் போதனா வைத்தியசாலையில் மரணமடைந்துள்ளார்.

Share this Article