அத்துமீறிய மீன்பிடியில் ஈடுபட்ட நாட்டுப்படகு மீனவர்கள் கைது!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், நான்கு இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெடுந்தீவு கடற்பரப்பில் நேற்றைய தினம் (ஓகஸ்ட் 05) செவ்வாய்க்கிழமை இரவுகடற்படையினர் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமான முறையில் நெடுந்தீவு கடற்பரப்பினுள், நாட்டுப் படகொன்றில்அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட நான்கு மீனவர்களை கைது செய்தகடற்படையினர், அவர்களின் படகினையும் பறிமுதல் செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்களை நெடுந்தீவு பொலிசார் ஊர்காவற்துறை நீதவான்நீதிமன்றில் இன்றையதினம் (ஓகஸ்ட் 06) முற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share this Article