நெடுந்தீவினை தூய்மையாக வைத்திருப்போம் எனும் தொனிப்பொருளுக்கிணங்க முதல் வேலைத்திட்டமாக சமூக மட்ட அமைப்புக்களின் பங்களிப்புடன் நெடுந்தீவு பிரதான வீதியின் இருமருங்கினையும் துப்பரவு செய்யும் செயற்திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகள் இன்று (ஓகஸ்ட் 01) இடம்பெற்றது.

இன்று வெள்ளிக்கிழமை காலை 8.30 மணிக்கு நெடுந்தீவு பல. நோ. கூ. சங்கம் அருகே சிரமதானம் ஆரம்பிக்கப்பட்டு இடம்பெற்றது.

இதன்போது நெடுந்தீவில் உள்ள சமூகமட்ட அமைப்புகள், பொது நிறுவனங்கள், பொதுமக்கள் மற்றும் சிறப்பாக நெடுந்தீவு பிரதேச கடற்படையிரும் இணைந்து செயற்பட்டமை குறிப்பிடத்தக்கது.