கிளிநொச்சி மாவட்ட செயலக வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட சிறுவர் பூங்காஇன்று(ஜூலை29) திறந்து வைக்கப்பட்டது.
கிளிநொச்சி மாவட்ட பதில் அரசாங்க அதிபர் எஸ்.முரளிதரன் அவர்களின்தலைமையில் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

இந் நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும்கடற்றொழில் அமைச்சருமான இராமலிங்கம் சந்திரசேகர், வடக்கு மாகாணஆளுநர் நாகலிங்கம் வேதநாயகன், யாழ் – கிளிநொச்சி மாவட்ட பாராளுமன்றஉறுப்பினர் க.இளங்குமரன், World Vision நிறுவனத்தின் கரைச்சி, கண்டாவளைபிரதேச திட்ட முகாமையாளர் மக்டலின் குயிண்டஸ் ஆகியோர் கலந்து கொண்டுஇதனை திறந்து வைத்தனர்.
கிளிநொச்சி மாவட்ட செயலகம் மற்றும் World Vision நிறுவனத்தின்பங்களிப்புடன் இந்த சிறுவர் பூங்கா நிர்மானிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட செயலகத்திற்கு பெற்றோர்களோடு வருகைதரும் சிறுவர், சிறுமிகளின்நன்மை கருதி குறித்த சிறுவர் பூங்கா திறந்து வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.