நெடுந்தீவு மேற்கு கடலில் பீரங்கி – தொல்பொருள் திணைக்களம் விரைந்து செயற்படுமா!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மேற்கு லோறன்சியார் ஆலயத்தை  அண்டிய கடலில் பீரங்கியை ஒத்தபொருள் ஒன்று அமிழ்ந்து கிடப்பது தொடர்பாக நீண்டகாலமாக தகவல் வெளிவந்தபோதும் அதனை ஆய்வுசெய்து மீட்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வதில் தாமதமடைவது தொடர்பில் ஆர்வலர்கள் ஆதிருப்த்தி வெளியிட்டுள்ளனர்.

நெடுந்தீவு பிரதேச செயலரினால் இது தொடர்பாக யாழ்ப்பாணம் தொல்பொருள்திணைக்களத்திற்கு தெரியப்படுத்திய நிலையில், கடந்த 02 ஆம் திகதி நெடுந்தீவுக்கு வருகை தந்த தொல்பொருள் திணைக்களத்தினர் அதனைப்  பார்வையிட்டு அது தொன்மையான பீரங்கி என்பதை உறுதி செய்துள்ளதாக தெரியவருகின்றது.

இருப்பினும் அதனை வெளியே எடுப்பதற்கு  கொழும்பில் இருந்து நீருக்கடியில் உள்ள பொருட்களை அகழும் தொல்லியல் பிரிவினரே இதனை கையாள வேண்டும் என்பதால் அவர்களுக்கான தகவல் திணைக்கள ரீதியாக அறிவிக்கப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்து சென்றதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை இவ்விடயம் தொடர்பில் கரிசனை கொண்டு விரைவாக பீரங்கியை வெளியே எடுக்க நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட குழுவினருக்கு நெடுந்தீவு பிரதேச செயலாளரினால் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

பீரங்கியை ஒத்த பொருள் வெளியே எடுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்படும் பட்சத்தில்நெடுந்தீவு சுற்றுலா துறை மேலும் வலுப்படும் என்பது மக்களின் நீண்டகால கருத்தாக உள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article