நெடுந்தீவை பிறப்பிடமாகவும் இராசாவின் தோட்டம், முலவை பகுதியை தற்காலிக வசிப்பிடமாகவும் கொண்ட அழகரத்தினம் கிறிஸ்ரிபால்ராஜ் (வயது48) என்பவரது சடலமே இன்று (ஜூலை 09) காலை கண்டுபிடிக்கப்பட்டது.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
அதிகாலை வேளை வீட்டில் இருந்து சென்ற குறித்த நபர் பின்னர் உயிரிழந்த நிலையில் முலவை சந்திப் பகுதியில் உள்ள இளைப்பாறும் கட்டிடப் பகுதியில் அமர்ந்திருந்தவாறு பின் பக்கமாக விழுந்து சடலமாக காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது குறித்து யாழ்ப்பாணம் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்ட நிலையில்பொலிஸார் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு உடலை பிரேத பரிசோதனைக்காக யாழ் போதனா மருத்துவமனையில் ஒப்படைத்தனர்.
மரண விசாரணை மற்றும் பிரேத பரிசோதனைகளின் பின்னர் உடலம் குடும்பத்தினரிடம் இன்றே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இறந்தவரது உடல் இராசாவின் தோட்டம், முலவை பகுதியில் உள்ள தற்காலிக வதிவிடத்தில் தற்போது அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளதுடன், இறுதி நிகழ்வுகளுக்காக எதிர்வரும் வெள்ளிக்கிழமை (ஜூலை 11) காலை நெடுந்தீவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.