ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டி-2025 இற்கான ஆரம்ப நிகழ்வு.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மண்ணின் மைந்தன் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டிகளுக்கான  – BIshop cup 2025  ஆரம்ப நிகழ்வு நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் தலமையில் நேற்றையதினம் (ஜூலை 05) மாலை புனித யுவானியார் ஆலய வளாகத்தில் இடம்பெற்றது.

நெடுந்தீவு மகா வித்தியாலய ஆசிரியர்  அருட்பணி சோபன் றூபஸ் அடிகளாரின் இறையாசீரோடு ஆரம்பிக்கப்பட்ட நிகழ்வில் தலைமை உரையினை பங்குத்தந்தைஅருட்பணி ப. பத்திநாதன் அடிகளார் வழங்கியிருந்தார்.

தொடர்ந்து பதிவு செய்யப்பட்ட ஐந்து அணிகளுக்குமான ஐந்து புனிதர்களின் பெயர்கள் வழங்கும் வகையில், அதற்கான தெரிவு குலுக்கல் முறையில்அணித்தலைவர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கு வழங்கப்பட்டு தெரிவுசெய்யப்பட்டது.

தொடர்ந்து மென்பந்து கிரிக்கெற் மற்றும் உதைபந்தாட்டப் போட்டிகளுக்காகஅணி வீரர்கள் தெரிவுக்கான ஏல நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை ஞாபகார்த்த போட்டிகளில்

01. சென்.பிலிப் அணி

02.சென்.கென்றி அணி

03.சென்.பற்றிக் அணி

04.மடு அன்னை அணி

05.சென்.பீற்றர் அணி

என பெயரிடப்பட்ட அணிகள்  போட்டியிடவுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article