மீண்டும் புத்துயிர் பெறும் நெடுந்தீவு மேற்கு பிரதானவீதி!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதான வீதியின் திருத்தப்படாமல் இருந்த நெடுந்தீவு மேற்கு வீதியின் ஒரு பகுதிக்கான திருத்த வேலைகள் ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகின்றது.

இதன் முற்கட்ட வேலையாக பிரதான வீதியின் நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாசவித்தியாலயம்  தொடக்கம் புதுக்கடை சந்தி வரையான வீதி தார் வீதியாக  திருத்தவேலை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

தற்போது வேலைகள் ஆரம்பிக்கப்பட்ட பகுதியில் இருந்து கிழக்கை நோக்கிய பிரதான வீதியின் நிலையே மிகவும் மோசமாகவுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

Share this Article