சமுர்த்தி அபிவிருத்தி திணைக்களம் ஆரம்பிக்கப்பட்டு 30 வருட நிறைவை முன்னிட்டு நெடுந்தீவு பிரதேச செயலக சமுர்த்தி பிரிவினரால் முன்பள்ளிமாணவர்களுக்கு சத்துணவு வழங்கும் நிகழ்வு முன்னெடுக்கப்பட்டது.

நெடுந்தீவு குழந்தையேசு முன்பள்ளி மற்றும் சென் ஜோண்ஸ் முன்பள்ளி மாணவர்களுக்குசத்துணவு வழங்கும் நிகழ்வே இவ்வாறு நடைபெற்றது.

இன் நிகழ்வுகளின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலாளர் திருமதி . நிவேதிகா கேதீசன் அவர்கள் கலந்துகொண்டு சிறப்பித்ததுடன் தலைமையகமுகாமையாளர் நகுலராணி,மகாசங்க முகாமையாளர் சுதர்மினி, கருத்திட்டமுகாமையாளர் இ.இரத்தினபாலன் மற்றும் கிராம அலுவலர்கள் ,சமுர்த்திஅபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பெற்றோர்கள் என பலர்கலந்து கொண்டு சிறப்பித்திருந்தனர்.