நெடுந்தீவு புனித தோமையார் ஆலய பெருவிழா இன்றைய தினம் (ஜூலை 03)சிறப்பாக இடம்பெற்றது.
திருவிழா திருப்பலியை யாழ்மறைமாவட்டத்தின் அகவொளி மையத்தின் உதவிஇயக்குனர் அருட்பணி ஜெராட் அடிகளார் ஒப்புக்கொடுத்தார்.

திருவிழா திருப்பலியின் நிறைவில் புனிதரின் திருச்சொருப பவனியும் , ஆசீர்வாதமும் இடம்பெற்றது.

புனித தோமையார் ஆலயத்தின் புனருத்தான பணிகளில் தம்மை ஈடுபடுத்திஅருட்சியாகவும் அழகாகவும் ஆலயம் தோற்றமளிப்பதில்பங்காற்றியவர்களுக்கான கௌரவமளிப்பு இன்றைய திருவிழா திருப்பலியின்நிறைவில் இடம்பெற்றது.
நெடுந்தீவு கத்தோலிக்க திருஅவையின் பங்குத்தந்தை அருட்பணி பத்திநாதன்அடிகளார் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் யாழ் மறைமாவட்டத்தின்அகவொளி மையத்தினுடைய உதவி இயக்குனர் அருட்பணி ஜெராட் அடிகளார்இவர்களுக்கான கௌரவத்தை வழங்கிவைத்தார்.

ஆலய புனருத்தான பணிகளில் அர்பணிப்புடன் தம்மை ஈடுபடுத்தியதுடன்எதுவித உபகாரத்தினையும் பெற்றிராது இவர்கள் பணியாற்றியிருந்தமைகுறிப்பிடத்தக்கது.
இதேவேளை நேற்றையதினம் (ஜூலை 03) நற்கருணை விழா திருப்பலியைஅருட்பணி சோபன் றூபஸ் அடிகளார் தலைமையேற்று ஒப்பக்கொடுத்ததுடன் நற்கருணை பவனியும் , ஆசீர்வாதமும் இடம்பெற்றது.
