நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தேர்வு நாளை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேச சபையின் தவிசாளர், உபதவிசாளர் தெரிவுகள் நாளையதினம் (ஜூன் 30) இடம்பெறவுள்ளது.

வடக்குமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் தேவநந்தினி தலைமையில் நாளையதினம் நெடுந்தீவு பிரதேச சபை மண்டபத்தில் பகல் 11.30 மணியளவில் இடம்பெறவுள்ளது.

நெடுந்தீவு பிரதேச சபை 13 உறுப்பினர்களை கொண்டமைந்துள்ளதுடன், கடந்த தேர்தலின் போது

இலங்கை தமிழ் அரசுக் கட்சி(வீடு) -06

ஈழமக்கள் ஜனநாயக கட்சி (வீணை)  -04

தேசிய மக்கள் சக்தி  (திசைகாட்டி) – 02

தமிழ்த் தேசிய முன்னணி (சைக்கிள்) – 01

என ஆசனங்களை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article