“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025 நாளை (ஜூன்20) ஆரம்பம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

“நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர்” – 2025  நாளையதினம் (ஜூன் 20) நெடுந்தீவில் கோலாகலமாக ஆரம்பமாகவுள்ளது. 

நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில்  முதல் போட்டியானது வெள்ளி  மாலை 3.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் இப் போட்டியில் Black tigars மற்றும் Eellavan அணிகள்  மோதவுள்ளன.

 

போட்டிகள் வெள்ளி, சனி மற்றும் ஞாயிறு தினங்களில் இடம்பெறவுள்ளதுடன் இத்தொடரில் 05 அணிகள் பங்குபற்றுவதுடன் 15  போட்டிகள் , 80 க்கும்மேற்பட்ட வீரர்கள் இணைந்துள்ளமை சிறப்பாகும்.

இதேவேளை இறுதிப்போட்டி ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 22) மாலை 4.00 மணிக்கு நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் இடம்பெறவுள்ளது.

இவ் வருடம் நெடுந்தீவு உதைபந்தாட்ட தொடர் – 2025 சாம்பியன் மகுடத்தைசூடிக்கொள்ளும் அணிக்கு ரூபா. 200,000.00 பணப்பரிசாகஅறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article