நெடுந்தீவு தூய அந்தோனியார் இன்று கொடியேற்றம்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு தூய அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா 2025 இன்றையதினம் (ஜூன்01) மாலை திருக்கொடி ஏற்றலுடன் ஆரம்பமாகியுள்ளது.

 

எதிர்வரும் ஜூன் 04ஆம் திகதி புதன்கிழமை மாலை நவநாள் திருப்பலி ஆரம்பமாவதுடன் தொடர்ந்து 10 தினங்கள் இடம்பெறவுள்ளது.

ஜூன் 12 வியாழக்கிழமை மாலை நற்கருணை திருப்பலியும் ஆசீர்வாதமும் இடம்பெறுவதுடன் ஜூன் 13  வெள்ளிக்கிழமை காலை திருவிழா திருப்பலியும் திருச்சொரூப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெறவுள்ளது.

இவ் ஆலய திருவிழாவின்போது மதங்களை கடந்து நெடுந்தீவு மக்கள் அனைவரும் கலந்து கொள்கின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article