நெடுந்தீவில் உயர்தர பரீட்சை 2024 இல் அதியுயர் பெறுபேற்றினை பெற்றமாணவர்கள் கௌரவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் க.பொ.த.உயர்தர பரீட்சை 2024 இல் அதியுயர் பெறுபேற்றினைபெற்ற மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு நெடுந்தீவுப் பாடசாலைகளின் பழைய மாணவர் மன்றம் –கனடா அமைப்பினரால் மேற்கொள்ளப்பட்டது.

கடந்த மே 09 வெள்ளிக்கிழமை அன்று நெடுந்தீவு மகாவித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்ற இந்நிகழ்வில்  நெடுந்தீவுப்பாடசாலைகளின் பழையமாணவர் மன்றம் –கனடா வின் செயலாளர் க.பொன்னுத்துரை அவர்கள் கலந்துசிறப்பித்ததோடு அதியுயர் பெறுபேறு பெற்ற மாணவர்களுக்கு கௌரவிப்பினையும் வழங்கிவைத்தார்.

அதியுயர் பெறுபேறு பெற்ற மாணவர்களது பெயரில் வங்கி கணக்குதிறக்கப்பட்டு ஊக்குவிப்புத் தொகை வைப்புச் செய்யப்பட்டு அதற்கான வங்கிப்புத்தகம் மாணவர்களிடம் கையளிக்கப்பட்டது.

இதன்போது நெடுந்தீவு கோட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவனுக்கு 15000.00 ரூபாவும், ஏனைய மாணவர்களுக்கு தலா 10000.00 ரூபாவும்வைப்புச்செய்யப்பட்ட புத்தகம் கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article