முதல் நன்றி திருப்பலிக்காக அருட்பணி விமல்றாஜ் அடிகளார் நெடுந்தீவில்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மண்ணின் மைந்தனும் அமல மரித் தியாகிகள் துறவறசபையின் புதிய குருவுமாகிய  அருட்பணி விமல்றாஜ் அடிகளார் தனது குருத்துவ அருட்பொழிவின் பின்னர் நெடுந்தீவிற்கு இன்று (மே10) காலை வருகைதந்தார்.

நாளைய தினம் (மே11) புனித யுவானியார் ஆலயத்தில் முதல் நன்றி திருப்பலியை ஒப்புக்கொடுப்பதற்காக அழைக்கப்பட்டிருந்த அருட்பணியாளரை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளார் மற்றும் நெடுந்தீவு ஆலயங்களின் நிர்வாகத்தினர் மாவிலி துறைமுகத்தில் வரவேற்றனர்.

பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளாரின் தலைமையில் நாளை காலை 06:15 மணிக்கு இடம்பெற விருக்கின்ற புதிய குருவிற்கான வரவேற்பு நிகழ்வை தொடர்ந்து நன்றித் திருப்பலியை தலைமையேற்று ஒப்புக்கொடுக்கும் அருட்பணியாளர் தமது ஆசீரை வழங்கவுள்ளார்.

அருட்தந்தை சகாயதாசன் விமல்றாஜ் அ.ம.தி  அடிகளார்  திருகோணமலைமறைமாவட்ட ஆயர் பேரருட் தந்தை கிறிஸ்டியன் நோயல் இம்மானுவேல்ஆண்டகையினால் திருகோணமலை தூய மரியாள் பேராலயத்தில் அண்மையில் (மே 03) குருவாக அருட்பொழிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article