நெடுந்தீவு வாக்காளர்களுக்காக மே 06ஆம் திகதி நடைபெறும் விசேட படகு சேவை.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உள்ளூராட்சி சபைத் தேர்தலை முன்னிட்டு நெடுந்தீவு வாக்காளர்களுக்காக மே 06 ஆம் திகதி (செவ்வாய்க்கிழமை) விசேட படகு சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன என்று நெடுந்தீவு பிரதேச செயலகம் அறிவித்துள்ளது.

வாக்காளர்களின் வசதிக்காக நெடுந்தீவு மற்றும் குறிகாட்டுவான் துறைமுகங்களுக்கிடையில் கீழ்க்காணும் நேரங்களில் மேலதிக படகு சேவைகள் இடம்பெறும்:

நெடுந்தீவு துறைமுகத்திலிருந்து:

  • காலை 06:45 – குமுதினி படகு

  • 07:30 – நெடுந்தாரகை படகு

  • 11:30 – கரிகணன் படகு

  • பிற்பகல் 02:30 – குமுதினி படகு

  • 03:00 – நெடுந்தாரகை படகு

குறிகாட்டுவான் துறைமுகத்திலிருந்து:

  • காலை 08:00 – குமுதினி படகு

  • 08:30 – நெடுந்தாரகை படகு

  • பிற்பகல் 01:00 – கரிகணன் படகு

  • 03:30 – குமுதினி படகு

  • 04:30 – நெடுந்தாரகை படகு

இந்த விசேட சேவைகள், வாக்காளர்கள் சுதந்திரமாக வாக்களிக்க அனுகூலமான முறையில் பயணம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

Share this Article