நெடுந்தீவு புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழா ஆரம்பம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு புனித பற்றிமா அன்னை ஆலய வருடாந்த திருவிழாவிற்கானகொடியேற்றம் நேற்றையதினம் (மே 01) சிறப்பாக இடம்பெற்றது. 

நேற்று மாலை நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளாரின் வழி நடத்தலில் கொடியேற்றம் இடம்பெற்றது.

தொடர்ந்து, அருட்பணி சோபன் றூபஸ் அடிகளாரால் அன்றையநாள் திருப்பலிஒப்புக்கொடுக்கப்பட்டதுடன் தொழிலாளர்கள் மற்றும் அவர்தம்குடும்பங்களுக்காக சிறப்பு மன்றாட்டும் இடம்பெற்றது.

நவநாள் திருப்பலிகள் எதிர்வரும் 04ஆம் திகதி முதல் இடம்பெற்று 12 ஆம் திகதி நற்கருணை திருப்பலியும், மறுநாள் (மே 13) காலை வருடாந்த திருவிழா திருப்பலியும் திருச்சொரூப பவனியும் ஆசீர்வாதமும் இடம்பெறவுள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article