டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) -2025 தொடரில் வெற்றி வாகை சூடியது DELFT DRAGON!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவில் இடம்பெற்ற டெல்ப்ட பிறீமியர் லீக் (DPL ) -2025 தொடரில்   DELFT DRAGON அணி வெற்றிவாகை சூடியதுடன் ஒரு இலட்சம் பணப் பரிசினையும் தனதாக்கிக்கொண்டது.

2025 ஆம் ஆண்டுக்கான டெல்ப்ட் பிறீமியர் லீக் (DPL ) 10 ஆவது தொடரின் இறுதிப்போட்டி இன்றையதினம் (ஏப்ரல் 27) மாலை நெடுந்தீவு மகாவித்தியாலய மைதானத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

இத் தொடரின் இறுதி போட்டி நிகழ்வின் பிரதம அதிதியாக நெடுந்தீவு பிரதேசசெயலர் நிவேதிகா கேதீசன் அவர்களும் விருந்தினர்களாக நெடுந்தீவு பிரதேசவைத்திய அதிகாரி , நெடுந்தீவு மகாவித்தியாலய அதிபர்  மற்றும் அப் பகுதி கிராமஅலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

DPL -2025 தொடரின் 2ஆம் இடத்தினை DELFT STALLIONS அணியினரும்  3ஆம் இடத்தினை ATTACK TIGERS அணியினரும் பெற்றுக்கொண்டன.

இந்த தொடரின் சிறந்த பந்துவீச்சாளராக வினோத்குமார் , சிறந்த துடுப்பாட்டவீரராக டிலக்சன். தொடரின் ஆட்டநாயகனாக டெலான்ஸ். தொடரின் சிறந்த களத்தடுப்பாளராக பபிக்குமார் ஆகியோர் தெரிவுசெய்யப்பட்டனர்.

போட்டித் தொடரில் வெற்றிபெற்ற அணிகளுக்கு பணப்பரிசலும் வெற்றிக்கிண்ணமும் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன் திறமையினை வெளிப்படுத்திய வீரர்களுக்கும் பணப்பரிசிலும் , வெற்றிக் கிண்ணமும் வழங்கப்பட்டது. 

Share this Article