நெடுந்தீவில் உள்ள புற்றுநோயாளருக்கு உதவிக் கொடுப்பனவு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

புற்றுநோயால் பாதிக்கப்பட்டு நெடுந்தீவில் வசித்து வருகின்ற புற்றுநோய் சிகிச்சையாளர்களுக்கு நேற்றுமுன்தினம் (ஏப்ரல் 22) நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலையில் வைத்து  ரூபா. 5000 உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.

மாதாந்தம் சிகிச்சைக்காக தெல்லிப்பளை வைத்தியசாலைக்கு  சென்று வருவதற்கான 11 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ் உதவிச் சேவையினை புலம்பெயர்ந்து வசிக்கும் நெடுந்தீவை சேர்ந்த லோ.ஜோன்சன் தனது பெற்றோர்களினதும் மூன்று சகோதரர்களினதும் நினைவாக, செய்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

இவ்மகத்தான சேவையை வழங்கி வருகின்ற புலம்பெயர் உறவுக்கு நெடுந்தீவு பிரதேச வைத்தியசாலை சார்பாக நன்றியும் , பாராட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article