நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தின் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” சிறப்பாக இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தால் முன்னெடுக்கப்படும் வாழ்விற்கானபேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு இன்றையதினம் (ஏப்ரல்12) காலை நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் சிறார்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது.

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையஇரகுபதி நினைவு நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராகஆர்வமுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் , கதை கூறல்மற்றும் தனிநபர் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் மற்றும் வாசிப்பினை மேம்படுத்தும் செயற்பாடு என்பன நிகழ்வின் அமர்வு – 13 இல் இடம்பெற்றது.

நிகழ்வின்  வளவாளராக சனசமூக நிலைய  தலைவர் தி.கிரிதரன் கலந்துகொண்டு சிறப்பாக சிறார்களை வழிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

இதேவேளை வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில்இவ்வருடம் இடம்பெற்ற 04 அமர்வுகளிலும் தொடச்சியாக கலந்து கொண்டசிறார்களுக்கான சிறந்த வாசகர் விருதும் வழங்கிவைக்கப்பட்டது.

சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும்  நிகழ்விற்கான வழிகாட்டல் மற்றும் அனுசரணையினை “வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழு”வினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share this Article