நெடுந்தீவில் பனைசார் அர்ச்சனைத் தட்டுகள் விற்பனை வைபவ ரீதியாக ஆரம்பம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு ஊரும் உறவும் நிறுவனமும் , பனை அபிவிருத்தி சபையும் இணைந்து பனைசார் உற்பத்தி பொருட்களை உற்பத்தி செய்யும் செயற்திட்டத்தினை ஆரம்பித்துள்ளன.

இதன் அடிப்படையில் ஆரம்ப நிகழ்வாக நெடுந்தீவு மாவிலித்துறை வீரபத்திரப் பிள்ளையார் ஆலயத்தில் பனைசார் பொருட்களால் செய்யப்பட்ட அர்ச்சனைத் தட்டுகள் நேற்றையதினம் (ஏப்ரல்09) முதல் வைபவ ரீதியாக விற்பனை செய்யும் நிகழ்வினை ஆரம்பித்துள்ளனர்.

அர்ச்சனைக்கான முதல் தட்டினை குறித்த ஆலயத்தின் தர்ம கர்த்தாவும் அற்புதம் அறக்கட்டளையின் ஸ்தாபகரும் பெற்று ஆரம்பித்து வைத்தார்.

இன்றையதினம் (ஏப்ரல்10) இடம்பெற்ற தேர்த்திருவிழாவின் போதும் விதவிதமான தட்டுகள் விற்பனையாகியமை குறிப்பிடத்தக்கதாகும்.

பனைசார் உற்பத்தியினை மேற்கொள்வோரை சிறு குழுக்களாக ஒன்றிணைத்து சுயதொழில் ஊக்குவிப்பு நடவடிக்கையினை ஆரம்பித்துள்ளதாக தெரியவருகின்றது.

Share this Article