தமிழ்த்தேசிய பேரவையினர் நெடுந்தீவில் பிரச்சார நடவடிக்கையில்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தமிழ்த்தேசிய பேரவையினர் நெடுந்தீவி்ல் நேற்றையதினம் (ஏப்ரல்09) தேர்தல் பிரச்சார நடவடிக்கையில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

குமுதினிபடுகொலை நினைவுத்தூபிக்கான மலர்வணக்கம்  செலுத்தப்பட்டதுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தமிழ்த்தேசிய பேரவையினர் சார்பில்நெடுந்தீவு பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர்களின் அறிமுகமும், கட்சியின் நிலைப்பாடும் தொடர்பாக மக்களுக்கு தெளிவூட்டப்பட்டதாக தெரியவருகின்றது.

இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரன்  மற்றும் பேரவையின் உறுப்பினர்களும் நெடுந்தீவு மக்களுடனான சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.

Share this Article