80வது ஆண்டு விழா குழுக்களில் இணைந்து பணியாற்ற வித்தியாலய பழைய மாணவர்க்கு அழைப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மகாவித்தியாலயம் ஆரம்பிக்கப்பட்டு 80 ஆவது ஆண்டு விழா 2026 ஜனவரி 16 மற்றும் 17 திகதிகளில் சிறப்பாக மேற்கொள்ளவுள்ள நிலையில்  இணைந்து பணியாற்ற வித்தியாலய பழைய மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

விழா ஏற்பாடுகளை மேற்கொள்வதற்காக அண்மையில் இடம்பெற்ற நிகழ்வில்  நூல் வெளியீட்டுக்குழு, கலைக்குழு, விளையாட்டுக்குழு மற்றும் ஏற்பாட்டுக்குழுஎன்பன உருவாக்கப்பட்டுள்ளது.

நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கமே பொறுப்பேற்றுஇவ்விழாவினை செயற்படுத்தவுள்ளதால் அதற்கென அமைக்கப்பட்ட குழுக்களில் இணைந்து பணியாற்ற ஆர்வம் கொண்ட வித்தியாலயத்தின் பழையமாணவர்களை சங்கத்தினர் அழைத்து நிற்கின்றனர்.

தொடர்புகளுக்கு..

செயலாளர்
நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கம்.

தொலைபேசி, வட்ஸ்அப் இல. 0770251033

Share this Article