நெடுந்தீவு மகாவித்தியாலய 80 ஆவது ஆண்டு விழா- 2026 ஜனவரி 16 , 17 இல்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வசிக்கும் நெடுந்தீவு மகா வித்தியாலயத்தின் பழைய மாணவர்கள் அனைவரையும் ஒன்றிணைந்து 2026ம் ஜனவரி  16 மற்றும் 17 திகதிகளில் இரண்டு நாள் நிகழ்வாக வித்தியாலய 80 ஆவது ஆண்டு விழாவினை சிறப்பாக மேற்கொள்ள பழைய மாணவர் சங்கம் தீர்மானித்துள்ளது.

நெடுந்தீவு மகாவித்தியாலய பழைய மாணவர் சங்கத்தின் பொதுக்கூட்டம்நேற்றையதினம்(மார்ச்30) வித்தியாலய கேட்போர் கூடத்தில் இடம்பெற்றபோதே இத் தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

இதன்போது 2026 ஜனவரி மாதம் 17ம் திகதியுடன் பாடசாலை ஆரம்பிக்கப்பட்டு80வது ஆண்டில் காலடி எடுத்து வைக்கும் நிகழ்வை சிறப்பாக மேற்கொள்வதுதொடர்பாக ஆராயப்பட்டதுடன் , பழைய மாணவர் சங்கமே பொறுப்பேற்றுமுன்னின்று மிக சிறப்பாக மேற்கொள்வது எனவும் அதற்கான ஆயத்தங்களை மிகவிரைவாக மேற்கொள்ள வேண்டும் எனவும் தீர்மானித்ததுடன் , இரண்டு நாள்நிகழ்வாக இந் இந்நிகழ்வினை மேற்கொள்வது எனவும் தீர்மானிப்பட்டது.

80வது ஆண்டு விழாவினை மிக சிறப்பாக மேற்கொள்வதற்கு உறுதுணையாகஏற்கனவே யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில் நெடுந்தீவிற்குவெளியில் இலங்கையில் வசித்து வருவோரை ஒன்றிணைக்கவும் ஏற்பாடுசெய்யவும் ஒர் ஏற்பாட்டுக்குழு உருவாக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நேற்றைய கூட்டத்தில் விழா ஏற்பாட்டுக்குழு, நூல் உருவாக்க குழு, கலைக்குழு, மற்றும் விளையாட்டுக்குழு என்பன உருவாக்கப்பட்டு அதற்கு பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்

மலர் வெளியீட்டுக் குழு  – செ.மகேஸ்

கலைக் குழு – அ.யோசேப்அனெக்சன்

விளையாட்டுக் குழு – பா.லீலியான் குருஸ்

ஏற்பாட்டுக் குழு – ம.சகாயஜெயசீலன்

80வது ஆண்டு விழாவினை மிக சிறப்பக மேற்கொள்வதற்கு அனைத்து பழையமாணவர்கள் நெடுந்தீவு வாழ் உறவுகள் மற்றும் அனைவரதுஒத்துழைப்புக்களையும்  பழைய மாணவர் சங்கம் வேண்டிநிற்பதாக குறிப்பிட்டுள்ளது.

Share this Article