கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த மார்ச் 27 ஆரம்பம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழாவானது நெடுந்தீவுபங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளாரின் நெறிப்படுத்தலில் நாளை மறுதினம் (மார்ச்27) கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி 03 நாட்கள் இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் மார்ச் 27 வியாழக்கிழமை மாலை 05:00 மணிக்குகொடியேற்றத்துடன் திருதின வாழிபாடுகள் ஆரம்பமாகவுள்ளன.

மார்ச் 28 வெள்ளிக்கிழமை நற்கருணை பெருவிழா திருப்பலி மாலை 05:00 மணிக்கு திருச்செபமாலையும்  திருச்சிலுவை பாதை தியானமும் இடம்பெற்றதை தொடர்ந்து இடம்பெறும்.

நற்கருணை பெருவிழா திருப்பலியை கிளரீசியன் துறவறசபையின்அருட்பணியாளர் ம. அபிலஸ் அடிகளார் தலைமையேற்று ஒப்புக்கொடுக்கவுள்ளார்.

எதிர்வரும் மார்ச் 29 சனிக்கிழமை காலை 06:30 மணிக்குதிருச்செபமாலையுடன் ஆரம்பமாகின்ற  திருவிழா திருப்பலி புனிதரின்திருச்சுரூப பவனி மற்றும்  ஆசீருடன் நிறைவடையும்.  இப்பெருவிழாதிருப்பலியை அமலமரித்தியாகிகள் துறவறசபையின் மலரும் முல்லைஅமையத்தின் இயக்குனர் அருட்பணி ஜீவரட்ணம் அடிகளார் ஒப்புக்கொடுத்துசெபிக்கவுள்ளார்.

கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலயத்திற்காக நெடுந்தீவு, மண்டைதீவு, குருநகர் மற்றும் அண்டிய பகுதிகளின் பங்குகளிலிருந்து யாத்திரைமேற்கொள்ளும் பக்தர்கள் இறையுறவில் மேலும் வலுப்பெற நெடுந்தீவுகத்தோலிக்க திருஅவை அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Share this Article