கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய வளாகம் துப்பரவுபணியில்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

கற்கடதீவு புனித அந்தோனியார் ஆலய தவக்கால வருடாந்த திருவிழாவானது  எதிர்வரும்  மார்ச் 27, 28 , 29 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ள நிலையில்ஆலயம் மற்றும் அதனை சூழவுள்ள பகுதிகளை சுத்தப்படுத்தும் பணிகள்முன்னெடுக்கப்படுகின்றன.

நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்பணி ப.பத்திநாதன் அடிகளாரின்ஆலோசனைக்கு அமைவாக கற்கடதீவு ஆலய நிர்வாகத்தினர் மற்றும்நலன்விரும்பிகள் இப்பணியை அங்கு  மேற்கொண்டு வருகின்றமை சுட்டிக்காட்டத்தக்கது.

குறித்த பணிகளுக்காக நெடுந்தீவிலிருந்து  சென்ற குழுவினர் மூன்று தினங்கள் அங்கு தங்கியிருந்து ஆலய வளாகத்தினை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article