சிறப்பாக இடம்பெற்ற நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மாவிலித்துறை றோ. க. த. க. வித்தியாலய வருடாந்த செயற்பட்டு மகிழ்வோம் – 2025  நிகழ்வு கடந்த மார்ச் 03 மதியம் 2.30 மணிமுதல் வித்தியாலய வளாகத்தில் சிறப்பாக இடம்பெற்றது.

வித்தியாலய முதல்வர்  கை.அரிஹரன் தலைமையில் இடம்பெற்ற விளையாட்டு நிகழ்வின் பிரதம விருந்தினராக நெடுந்தீவு பிரதேச செயலர் நிவேதிகா கேதீசன் அவர்களும் சிறப்பு விருந்தினர்களாக நெடுந்தீவு பங்குத்தந்தை அருட்திரு ப.பத்திநாதன் அடிகளாரும் நெடுந்தீவு மேற்கு சைவப்பிரகாச வித்தியாலய அதிபர் ச. ஞானக்குமார் அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

இப்போட்டிநிகழ்வில் அழைக்கப்பட்ட விருந்தினர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் , நலன்விரும்பிகள் என பலர் கலந்து சிறப்பித்தருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share this Article