நெடுந்தீவு மகா வித்தியாலய தரம் 06 மாணவர்கள் வரவேற்பு நிகழ்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

2025 கல்வி ஆண்டிற்கான தரம் 06 இற்கு நெடுந்தீவு மகாவித்தியாலயத்திற்கு புதிதாக இணைந்துள்ள மாணவர்களை வரவேற்கும் நிகழ்வு இன்றையதினம் (ஜனவரி29) வித்தியாலயத்தில் மிகவும் சிறப்பாக நடைபெற்றது.

புதிய மாணவர்கள் வித்தியாலய நுழைவாயிலில் இருந்து மலர்ச் செண்டுகள் கொடுத்து விருந்தினர்கள், அதிபர், ஆசிரியர்கள் , பெற்றோர்கள் மற்றும் மாணவர்களால் விழா மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு நிகழ்வுகள் இடம்பெற்றன.

வித்தியாலய அதிபர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் மத குருமார்களது ஆசிச்செய்தியுடன், வாழ்த்துரைகளும் இடம்பெற்றது.

புதிதாக 28 மாணவர்கள் 2025 கல்வி ஆண்டில் பாடசாலையில்இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article