நெடுந்தீவிலிருந்து மேலதிக சிகிச்சைக்காக நோயாளர்களை வான்வழியாக இடமாற்றீடுசெய்ய ஏற்பாடு!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவுக்கான கடல் வழிப்பயணம் திறுத்தப்பட்டுள்ள நிலையில் யாருக்கேனும்மாரடைப்பு மற்றும் வேறு தீவிர நோய்கள் ஏற்படின் உடனடியாகவைத்தியசாலைக்கு வருவதன் ஊடாக மேலதிக சிகிச்சைக்காக  உலங்கு வானூர்தி மூலம் வான்வழியாக நோயாளர்களை  இடமாற்றீடு செய்வதற்குஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நெடுந்தீவு பிரதேச வைத்திசாலை செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாரடைப்பு மற்றும் வேறு தீவிர நோய்கள்  ஏற்படுகின்ற சந்தர்ப்பங்களில்உடனடியாக வைத்தியசாலைக்கு வருகைதருமாறு வைத்தியச்சாலை நிர்வாகத்தினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

தற்போது ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை காரணமாக கடுங்காற்றும் தொடர்மழையும் நிலவுவதனால் நெடுந்தீவுக்கான கடல்வழி பிரயாணம் கடந்த இரு நாட்களாக தடைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். 

Share this Article