வீட்டுத்தோட்ட பயிற்செய்கைக்கான விதையினங்கள் வழங்கப்பட்டன

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்குட்பட்ட கிராம சேவகர் பகுதிகளில் வீட்டுப் பொருளாதார போசனையை மேம்படுத்தி குடும்ப அலகுகளை வலுவூட்டுவதற்கான தேசிய வீட்டுத்தோட்ட பயிற்செய்கை நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட சமுர்த்திப் பயனாளிகளுக்கு வீட்டுத்தோட்ட மரக்கறி விதைகள் வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (நவம்பர் 13) பிரதேச செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது .

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திரு.எவ.சி.சத்தியசோதி, அவர்களும் பிரதேச சபையின் உபதவிசாளர் திரு.தோமஸ் செல்வராஜ் அவர்கள், பெரமுன கட்சியின் உறுப்பினர் திரு.பி.பற்றிக்றொஷான் அவர்கள், சமுர்த்தி தலமை முகாமையாளர் திரு.ராஜ் பவான் பிரதேச செயலக உத்தியோகதர்கள் சமுர்த்தி உத்தியோகத்தர்கள், கிராம சேவையாளர்கள் ஆகியோர் கலந்து கொண்டு தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு விதைகளை வழங்கி வைத்தனர்

Share this Article