பண்ணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சிரமதான பணிகள்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பண்ணையைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று வெள்ளிக்கிழமை (ஒக் 04) காலை சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்த நடவடிக்கையில் சுகாதாரத் துறை, பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் பங்காற்றினர். இதன்போது பிளாஸ்டிக் பொருட்கள் சேகரிக்கப்பட்டதுடன், விழிப்புணர்வு பதாகைகள் மற்றும் பிளாஸ்டிக் சேகரிக்கும் கூடங்கள் அமைக்கப்பட்டன.

ஆரம்ப நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகன், யாழ் மாவட்ட பதில் செயலாளர் ம. பிரதீபன், வடக்கு மாகாண பிரதம செயலாளர் இளங்கோவன், வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் அருள்ராஜ், சுகாதார பணிப்பாளர் சமன் பத்திரண, யாழ்ப்பாணம் பிரதேச செயலாளர் சுதர்சன், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் ஆ. கேதீஸ்வரன், இராணுவ மற்றும் பொலிஸ் உயரதிகாரிகள், கடற்படையினர், சுகாதார அதிகாரிகள், யாழ் மாநகர சபை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Share this Article