நெடுந்தீவு பிரதேச செயலகத்தால் வாக்களிப்பது தொடர்பான விழிப்புணர்வு!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு பிரதேசத்தில் உள்ள மக்கள் ஒன்றுகூடும் இடங்களில் நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் செல்லுபடியற்ற வாக்குபதிவை இல்லாமற் செய்யும் வகையில் செயலக அலுவலர்களால் விழிப்புணர்வு மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

நெடுந்தீவில் உள்ள பிரதேச வைத்தியசாலை,தேவாலயங்கள், கிராம அலுவலர் பிரிவுகள், சந்தைபகுதி, கடற்படையினரின் தையல் நிலையம் மற்றும் பொது மக்கள் கூடும் இடங்களில் இச்செயற்பாடு இடம்பெற்று வருகின்றது.

எதிர்வரும் 21 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் செல்லுபடியான வாக்குப்பதிவை மேற்கொள்ள வேண்டும் என்ற அடிப்படையில் விழிப்புனர்வு கருத்திட்டத்தை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article