புலமைப் பரிசில் பரீட்சை எழுதிய மாணவர்களின் பெற்றோர்களுக்கானமுக்கிய அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

புலமைப் பரிசில் பரீட்சை நிறைவடைந்தவுடன் மாணவர்களை சுதந்திரமாகநடமாட விடுமாறு விசேட வைத்திய நிபுணர் ரூமி ரூபன், பெற்றோர்களிடம்கோரிக்கை விடுத்துள்ளார்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சைக்கு முன்னரும் பின்னரும் தங்களதுபிள்ளைகளை ஏனைய பிள்ளைகளுடன் ஒப்பிடுவதை தவிர்க்குமாறும் வைத்தியர்பெற்றோர்களிடம் கேட்டுக் கொண்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த சில மாதங்களாக புலமைப்பரிசில் பரீட்சைக்கு தயாரான மாணவர்கள்அதிக மன அழுத்தத்தில் இருந்தனர். இனி மாணவர்கள் மீது அழுத்தம் கொடுக்கவேண்டாம்.

பரீட்சை எழுதிய பின், பரீட்சை வினாத்தாளை மீண்டும் மாணவர்களிடம்கொடுத்து, அவர்களை எழுத வைத்து, விடைகள் சரியாக உள்ளதா என சோதித்துபார்ப்பதில் பலனில்லை.

புலமைப்பரிசில் பரீட்சை என்பது மாணவர்களின் வாழ்வில் சந்திக்கும்இடையூறுகளில் ஒன்று.  வாழ்க்கையில் இது போன்ற அனுபவங்கள் இன்னும்அதிகமாக இருக்கும் என்பதை மாணவர்களின் பெற்றோர்கள் தங்களதுபிள்ளைகளுக்கு கூறி அவர்களை பலப்படுத்த வேண்டும்.

மேலும், புலமைப்பரிசில் பரீட்சை காலத்தில் மாணவர்கள் இழந்த தங்களதுகுழந்தைப் பருவத்தை மீண்டும் அவர்களுக்கு வழங்குங்கள் என குறிப்பிட்டுள்ளார்.

Share this Article