நெடுந்தீவு மேற்கில் இரு எருதுகள் அடித்து கொலை – நெடுந்தீவு பொலிசார் தீவிர விசாரணையில்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு மேற்கு முருக்குச்சிப் பகுதியில் இரு எருதுகள் அடித்து கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேக நபர்களை கைதுசெய்யும் தீவிர நடவடிக்கையில்  பொலிசார் ஈடுபட்டுள்ளதாக நெடுந்தீவு பொலிசார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் தெரிய வருவதாவது.

முருக்குச்சி பகுதியில் உள்ள காணி ஒன்றினை அடைத்து அதற்குள் தனது வளர்ப்பு மாடுகளை அடைத்து வைத்து வளரத்தவேளை இச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

காணியின் கல் வேலிகள் அனைத்தும் சரித்து விடப்பட்டுள்ளதுடன் அங்கிருந்த இரண்டு சவாரி எருதுகள் அடித்து கொல்லப்பட்டுள்ளது.

எருதுகளின் உரிமையாளர் இன்றையதினம்  (செப். 10)  அவற்றை பாரக்கச் சென்றபோதே  சம்பவம் தொடர்பில் தெரியவந்து உடனடியாக பொலிசில் முறைப்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article