நெடுந்தீவு அருகே கடலில் மீன்பிடியில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர்!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து, மூன்று படகுகளில் கடற்றொழிலில் ஈடுபட்ட 14 இந்திய மீனவர்கள் நேற்று சனிக்கிழமை (செப் 07)  மாலை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட 14 இந்திய மீனவர்களும், அவர்கள் பயன்படுத்திய மூன்று படகுகளுடன் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டனர்.

இன்று (செப் 08) அவர்கள் யாழ்ப்பாணம் மாவட்ட கடற்றொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டு, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட உள்ளனர்.

4o

Share this Article