வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” அமர்வு – 8 இன்று சிறப்பாக இடம்பெற்றது.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையத்தால் முன்னெடுக்கப்படும் வாழ்விற்கானபேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான நிகழ்வு இன்றையதினம் (ஆகஸ்ட் 19) திங்கட்கிழமை காலை நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலைய மண்டபத்தில் சுமார் 40 சிறார்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது  

வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் நெடுந்தீவு கிழக்கு சனசமூக நிலையஇரகுபதி நினைவு நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராகஆர்வமுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் , கதை கூறல்மற்றும் தனிநபர் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் என்பன நிகழ்வின்அமர்வு – 8 இல் இடம்பெற்றது

நிகழ்வின்  வளவாளராக நெடுந்தீவு கோட்டக் கல்வி அலுவலக அபிவிருத்திஉத்தியோகத்தர் திருமதி.மோகன்ராஜ் கலைவாணி அவர்கள் கலந்துகொண்டு சிறப்பாக சிறார்களை வழிப்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article