நெடுந்தீவிற்கான போக்குவரத்து நாளை முதல் நிறுத்தப்படுமா?

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

நெடுந்தீவிற்கான போக்குவரத்து இன்று முதல் நிறுத்தப்படுமா?

தற்போது தீவகத்தில் இடம் பெற்று வரும் கோரோனாத் தாக்கத்தினை கட்டுப்படுத்தும் நோக்கில் நெடுந்தீவிற்கான போக்குவரத்த்தினை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இன்றைய தினம் மதியம் (October 31)  02.30 மணிக்கு நெடுந்தீவில் இருந்து புறப்படும் குமுதினிப்படகு மாலை 04.00 மணிக்கு மீளவும் குறிகட்டுவான் இறங்கு துறைமுகத்தில் இருந்து புறப்படும் எனத் தெரிவிக்கப்படுகின்றது

நாட்டு நிலமையினைக் கருத்திற் கொண்டு நாளை முதல் போக்குவரத்தினை நிறுத்தம் செய்வதற்கு தீர்மானிக்கப்படுவதாகவும் நெடுந்தீவிற்கு செல்பவர்கள் இன்று மாலை 04.00 மணி குமுதினியூடாக பயனிக்க முடியும் எனவும் தெரிவிக்கப்படுகின்றது

தற்போதைய சூழ்நிலையினைக் கருத்திற் கொண்டு தொடர்ச்சியாக இரண்டு வாரங்களுக்கு சகல போக்குவரத்துக்களையும் நிறுத்தம் செய்து மக்கள் வெளியேறுவதும் உள்வருவதையும் நிறுத்தம் செய்து கொள்ளவது பாதுகாப்பாக காணப்படும் என நெடுந்தீவு மக்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

Share this Article