நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலய புதிய அதிபருக்கான வரவேற்பு நிகழ்வு.

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலயத்திற்கு புதிதாக நிரந்தர நியமனம் பெற்று வந்த அதிபருக்கான வரவேற்பு நிகழ்வு இன்றையதினம் (ஜூலை 23) காலை சிறப்பான முறையில் இடம்பெற்றது.

2024 ஜூலை 02 திகதி முதல் கடமையினை பொறுப்பேற்றுள்ள தங்கவடிவேல் தயாகரன், அதிபர் அவர்களுக்கான வரவேற்பு நிகழ்வு பெற்றோர் , மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் பாடசாலை சமூகத்தினரால் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது.

பாடசாலைக்கு அருகில் உள்ள கமலாலயம்பதி முருகன் ஆலயத்தில் இருந்து புதிய அதிபர்,  மலர்மாலை அணிவித்து மாணவர்களின் அணிவகுப்புடன் வித்தியாலய மண்டபத்திற்கு அழைத்து வரப்பட்டு அரங்க நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

 

Share this Article