நெடுந்தீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளரின் உடல் தீயுடன் சங்கமம்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read
நெடுந்தீவு மேற்கைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் தற்போது வவுனியாவை வதிவிடமாகவும் கொண்ட நெடுந்தீவு பிரதேச சபை முன்னாள் தவிசாளர் நல்லதம்பி சசிகுமார் அவர்கள் கடந்த திங்கட்கிழமை (ஜூலை 15) காலை வவுனியாவில் காலமாகியிருந்தார்.
அன்னாரின் இறுதி நிகழ்வுகள் இன்றையதினம் (ஜூலை18) காலை அவரது வவுனியா இல்லத்தில் இடம்பெற்றது. சமய முறைப்படியான நிகழ்வுகளின் பின்னர் இறுதி அஞ்சலி நிகழ்வு இடம்பெற்றது இதன்போது ஓய்வுநிலை அதிபர்கள், முன்னாள் வட மாகாணசபை உறுப்பினர்கள், நெடுந்தீவு இளைஞர் சம்மேளன தலைவர் மற்றும் உறவுகள் அஞ்சலி உரையாற்றியிருந்தனர்.
அதனை தொடர்ந்து அன்னாரின் பூதவுடல் பெருந்திரளான மக்களி்ன் பங்களிப்புடன் ஊரவலமாக எடுத்து செல்லப்பட்டு இந்து மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
இறுதி நிகழ்வின்போது நெடுந்தீவு, மற்றும் ஏனைய இடங்களை சேர்ந்த உற்றார், உறவினர், நண்பர்கள் , ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி பொறுப்பாளர்கள் என பெருந்திரளானோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கதாகும்.
Share this Article