உதைபந்தாட்ட கிண்ணம் வென்றது சென் கென்றிஸ்அணி – Bishop cup 2024 போட்டித் தொடர்.

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

Bishop cup 2024 போட்டித் தொடரின் உதைபந்தாட்ட இறுதியாட்டத்தில்  கென்றி எதிர் சென் பிலிப் ஆகிய அணிகள் மோதியதில் சென் கென்றி அணி வெற்றிபெற்று ஆயர் கிண்ணம் – 2024 இனை தனதாக்கிக்கொண்டது.

உதைபந்தாட்ட  சுற்றுத்தொடர்களில் பலமான அணிகளுடன் மோதி சென் பிலிப் அணியும், சென் கென்றிஸ் அணியும் இறுதியாட்டத்திற்கு தேர்வாகி மோதிய நிலையில்   01 :01 எனும் கோல் கணக்கில் சமநிலையில் முடிந்த நிலையில் இரு அணிகளுக்கும் தண்டனை உதை வளங்கப்பட்டது அதன்போது    03 : 02 கோலினை பெற்று சென் கென்றிஸ் அணி வெற்றிபெற்று கிண்ணத்தை தனதாக்கியது.

அதிக கோல் – விஜயராஜ் (சென் கென்றிஸ்)
கோல் காப்பாளர் – சந்தோஸ் (சென் கென்றிஸ்)
பின்கள ஆட்டக்காரர் – கொலின்ரன் (சென் நிக்கோலஸ்)

Share this Article