நெடுந்தீவு சுப்பிரமணிய வித்தியாலய மாணவர்கள் சாதனை!

SUB EDITOR
SUB EDITOR
0 Min Read

தீவக வலய மட்டத்திலான தமிழ்த்தினப் போட்டி – 2024 இல்  போட்டியில் நெடுந்தீவு கிழக்கு சுப்பிரமணிய வித்தியாலய மாணவர்கள் வெற்றிபெற்று மாகாண மட்டப் போட்டிக்கு தெரிவாகியுள்ளனர்.

கடந்த ஜூலை 04 ஆம் திகதி இடம்பெற்ற தீவக வலயமட்டத்திலான பிரிவு ஒன்றிற்கான மொழித்திறன் போட்டியில் மோகன்ராஜ் துளசிகன் பேச்சுப்போட்டியிலும்,

சுசிகரன் சஜனிகா பாவோதல் போட்டியிலும் முதலிடம் பெற்று மாகாணமட்டத்திற்கு தெரிவாகி நெடுந்தீவுக்கும், பாடசாலை சமூகத்திற்கும் பெருமைசேர்த்துள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.

Share this Article